கிறிஸ்துவின் உபதேசத்தில் கட்டப்பட்டுவரும் கர்த்தருடைய பிள்ளைகளின் கவணத்திற்க்கு….

நாம் யாவரும் முகமுகமாய் நேரில் சந்திக்காமல் இருந்தாலம் தேவனுடைய பெரிதான கிருபையால் சில வருடங்களாக கர்த்தருடைய வார்த்தையின்மூலம் நாம் இணைக்கப்பட்டு சரீர வளர்ச்சிக்காக பிரயாசப்பட்டு வருகிறோம்..இந்தப்பிரயாசம் ஒரு மூலையில் முடங்கிக் கிடக்காமல் உலகமெங்கிலும் பிரகாசிக்கும்படியாக தேவ உணர்த்துதலின் படி தொடங்கப்பட்டதே DOCTRINE OF CHRIST MINISTRIES IN INTERNATIONAL (DOC)

இந்த கிறிஸ்துவின் உபதேச ஊழியம் விழுந்து போகும் சபைகளை உபதேசத்தில் ஊன்றக்கட்டவும் அழிந்துபோகும் ஆத்துமாக்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்து அவர்களுக்குள் கிறிஸ்து உருவாக பிரயாசப்படவும் தொடங்கப்பட்டது…

இது தனி ஒரு நபரால் முடியாதகாரியம்.!??

அதனாலதான் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவும் மனுஷர்தயவைநாடினார்
அவர்கள்தான் 12 சீஷர்கள்..

இந்த பூமியில் துர் உபதேசிகளின் ஆளுகை மிக ஆழமாக வேறூன்றிவிட்டார்கள் இதை தகர்ப்தென்பது அவ்வளவு சுலபமல்ல

ஆனால் தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை யூத கிரேக்க மார்க்கத்திலிருந்து ஒவ்வொரு ஆத்துமாவாக எப்படி அப்போஸ்தலர்கள் பிடுங்கி எடுத்தார்களோ அப்படியே நாமும் கிறிஸ்துவின் உபதேசத்தை கொண்டுபோவோம் …

ஒவ்வொரு ஆத்துமாவாக பிடுங்கி எடுப்போம்
இதற்க்கு DOC.யின் அஸ்திபாரங்களான கர்த்தருடைய பிள்ளைகள் தேவன் அழைத்த அழைப்பிலும் விசுவாசத்திலும் மண உறுதியிலும்
நிலைத்திருங்கள் அஸ்திவாரத்தை அசைக்க சாத்தான் எடுக்கும் எந்த முயற்ச்சிக்கும் இடங்கொடாதிருங்கள் மணத்தெளிவுள்ளவர்களாய் இருங்கள்
சமாதானமாய் இருங்கள் ஒருமணமுள்ளவர்களாய் இருங்கள் கனம்பன்னுவதில் முந்திக்கொள்ளுங்கள் தாழ்மைக்கு இடங்கொடுங்கள் சத்தியத்தில் வேறூன்றுங்கள் விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருங்கள்

கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள்.
ரோமர் 12:18

ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து இப்படியாக கிறிஸ்துவின் பிரமாணத்தை நாம் நிறைவேற்றுவோம் .

தேவனுடைய காரியங்களில் நாம்பயணிக்கும்போது பல இண்ணல்களையும் இடையூறுகளையும் சந்திக்க வேண்டியது வரும்..

நாம்தான் தேவபெலத்தோடும் நம்முடைய விசுவாசத்தோடும்
நல்லப்போராட்டம் போராட பழகிக்கொள்ள வேன்டும்..

இடைவிடாமல் ஜெபியுங்கள்

அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.
1 பேதுரு 5:7…

தேவனுடைய ஆசீர்வாதத்தோடு கிறிஸ்துவின் உபதேசத்தை(DOC) உலகறியச்செய்வோம்

தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்